BREAKING NEWS

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்கள்

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்கள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட
ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர். இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில்,

வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் 3 விவசாயிகளுக்கு ரூ.3,50,681 மதிப்பிலான பயிர் கடன்களையும், 1 விவசாயிக்கு ரூ.56 ஆயிரம் மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன்களையும் மற்றும் 1 விவசாயிக்கு (ரூ. 5,800/- மானியம்) விசை தெளிப்பான் கருவியும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.

 

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ,  மண்டல வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS