BREAKING NEWS

காஞ்சிபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கனரக வாகனத்தை மீட்கும் நிகழ்வினால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் அருகே மாநில நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கனரக வாகனத்தை மீட்கும் நிகழ்வினால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சாலை ஓரங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முக்கியமாக நடைபெற்று வருகிறது இதனால் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நிலவி வருகிறது.

 

மழைநீர் வடிகால் பணிகள் அவ்வப்போது தடைபெறுவதும், கடந்த ஒரு மாதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு குழுவை மாண்டாஸ் புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தால் பணி பாதிப்பு ஏற்பட்டது.

 

தற்போது இந்த பணிகள் அனைத்தும் மீண்டும் அந்தந்த பகுதிகளில் தொடங்கப்பட்டு வருவதால் சாலை ஓரங்களில் வாகனங்கள் அவ்வப்போது சீக்கி மீண்டும் அதை சரி செய்யும் பணியில் வாகன ஓட்டிகளும், அதற்கு உறுதுணையாக போக்குவரத்து காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 

குறிப்பாக தொழிற்சாலை பணி நேரம் மற்றும் காலை அலுவலகப் பணிக்கு செல்லும் போது , அதிகாலையில் கவனக்குறைவாக வாகன ஓட்டிகள் இதுபோன்ற கால்வாய் பணிகளின் ஓரம் சென்று சிக்கிக் கொள்வதால் பெரும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.

 

அவ்வகையில் இரு தினங்களுக்கும் முன்பு ஏற்பட்ட விபத்தில் சாலை ஓரமாக கவிழ்து இருந்த கண்டெய்னரை அப்புறப்படுத்தும் பணியில் இன்று ஈடுபட்ட போது ஒரு மணி நேரமாக காஞ்சிபுரம் – அரக்கோணம் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியை சந்தித்தனர்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் – அரக்கோணம் செல்லும் சாலையில் வெள்ளகேட் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சாலை ஓரம் கட்டப்பட்டு வரும் கால்வாய் பணியாள் தோண்டப்பட்ட பள்ளம் அருகே டேங்கர் கனரக வாகனம் இரு தினங்களுக்கு முன்பு சாலை ஓரம் கவிழ்ந்த நிலையில் அவற்றை மீட்க ஜேசிபி உயர் ரக வாகனங்கள் மூலம் மீட்கப்பட்டது .

 

 

இப்பகுதி சாலை வழியாக பல்வேறு வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று கொண்டு எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலையாகவே இருக்கும். இந்நிலையில் கவிழ்ந்த வாகனத்தை மீட்கப்படும்போது போக்குவரத்து நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

 

மேலும் கனரக வாகனம் மீட்கப்பட்டு சாலையின் ஓரம் நிற்கப்பட்ட பின்னரே போக்குவரத்து சரி செய்யப்பட்டன இவற்றால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

 

மேலும் சாலை பணிகள் நடைபெறும் பகுதியில் போதிய எச்சரிக்கை பலகைகள் இல்லாததும் சாலையின் இடது மற்றும் வலது ஓரங்களில் இது போன்ற பணிகள் நடைபெறுவதற்கான எச்சரிக்கை மிளிரும் ஒளிப்பான்களில் அமைக்காததால் இது போன்ற விபத்துகளும் நேரிடுவதாக வாகன ஓட்டுகள் மற்றும் சாலையோர குடியிருப்புகள் தெரிவிக்கின்றனர்.

 

CATEGORIES
TAGS