காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரம் ஜனவரி 11 முதல் 17 வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இரண்டாம் நாளான நேற்று , தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் பின்பக்க சிவப்பு நிற பிரதிபலிப்பு அட்டை (red replied sticker) ஓட்டப்பட்டு உள்ளதா என்பதை சரி பார்த்து அவற்றை ஒட்டவில்லை என்றால் வாகனங்களுக்கு புதியதாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வாகனங்களை ஆய்வு மேற்கொண்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தினகரன், குமரா ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காஞ்சிபுரம் கா. பன்னீர்செல்வம், ஸ்ரீபெரும்புதூர் கிருஷ்ணன், தாம்பரம் சோமசுந்தரம் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் அனைத்து ஓட்டுனர்களையும் ஒன்றிணைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களில் பிரதிபலிப்பு அட்டை ஒட்டுவதற்கான காரணங்களை விளக்கி கூறினார்.
இவற்றால் தூரத்தில் இருந்து வாகனங்கள் முன்னால் நிறுத்தப்படுவதையோ அல்லது வேக குறைவாக செல்வதையோ கவனிக்கும் ஓட்டுநர்கள் கவனமாக பயணிப்பார்கள் என்ற நோக்கில் சிவப்பு நிற பிரதிபலிப்ப அட்டை அனைத்து வாகனங்களுக்கும் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
கண் பரிசோதனை செய்வதற்காக காத்திருந்த வாகன ஓட்டுனர்கள்.
கண் பரிசோதனை செய்வதற்காக காத்திருந்த வாகன ஓட்டுனர்கள்.
மேலும் நீண்ட தூர பயணமாக கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பதால் அவர்கள் சோர்வடைந்து விபத்துக்கள் ஏற்படுவதாகவும்,
அவ் வாகனங்களை நிறுத்தி ஓட்டுனர்களுக்கு தேநீர் இலவசமாக வழங்கி நீண்ட பயணம் செய்யும் வாகனங்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை 15 நிமிடம் ஓய்வெடுத்து பிறகு வாகனத்தை இயக்க வேண்டும் என ஓட்டுனர்களிடம் அறிவுறுத்தினார்.
இன்று மூன்றாவது நாளையொட்டி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் தனியார் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது.