BREAKING NEWS

காஞ்சிபுரம் வழியாக இயங்கி வந்த வட்ட ரயில் சேவை குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என காஞ்சிபுரம் ஆய்விற்கு வந்த தென்னக ரயில்வே , சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின்புனித் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் வழியாக இயங்கி வந்த வட்ட ரயில் சேவை குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படும் என காஞ்சிபுரம் ஆய்விற்கு வந்த தென்னக ரயில்வே , சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின்புனித் தெரிவித்தார்.

தென்னக ரயில்வே சார்பில் பொது மக்களின் போக்குவரத்து வசதிக்காக மின்சார ரயில் மற்றும் தொலைதூர ரயில்கள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில் தென்னக ரயில்வேயில் சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின் புனித் இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் , அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

 

காஞ்சிபுரம் புது ரயில்வே நிலையத்திற்கு வந்த சென்னை கோட்ட உதவி மேலாளர் சச்சின் புனித், நிலைய மேலாளர் அறை , பயணிகள் தங்கும் வரை மற்றும் குடிநீர் கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பயணிகள் தங்கும் அறையில் அவர்களின் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்ட வசதிகள் குறித்து அங்கு ஆங்கிலத்தில் மட்டும் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டு இதனை மாநில மொழிகளிலும் அச்சிட்டு ஒட்ட அறிவுறுத்தினார்.

 

இதன் பின் செய்தியாளிடம் பேசுகையில் , நாள்தோறும் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ரயில் ஓட்டுனர் உள்ளிட்ட ஊழியர்களின் அடிப்படை வசதிகள் எவ்வாறு உள்ளது என குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இதனை கண்டிப்பாக செயல்படுத்த பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

தற்போது உள்ள டிஜிட்டல் உலகத்தில் டிக்கெட் முன்பதிவு முதல் தங்கும் வரை அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் ரயில்வே இணையதளத்தில் உள்ளதால் அதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

கடந்த கொரோனா காலத்திற்கு முன்பு காஞ்சிபுரம் வழியாக அரக்கோணம் சென்னை பீச் வழித்தடத்தில் செயல்பட்டு வந்த வட்ட வடிவ ரயில் சேவையை அதை நிறுத்தப்பட்டதை மீண்டும் இயக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளதாக கேட்டதற்கு, கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட சேவைகள் ஒவ்வொன்றும் ஆய்வின் அடிப்படையில் மீண்டும் துவங்கியுள்ளது.

 

வட்ட வடிவ ரயில் சேவை திட்டத்தில் அதனுடைய வருவாய் பொறுத்து மீண்டும் ஆய்வு மேற்கொண்டு இத்திட்டத்தை துவக்க பரிசளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது தென்னக ரயில்வே சென்னை கோட்ட வர்த்தக பிரிவு , எலக்ட்ரிக்கல் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு மேலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS