BREAKING NEWS

காட்டாங் கொளத்தூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்.

காட்டாங் கொளத்தூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க  மாவட்ட செயற்குழு கூட்டம்.

செங்கைஷங்கர் Bsc.,

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக
வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பரணி
தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாவட்ட செயலாளர் குணசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாய் கிருஷ்ணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.  செங்கல்பட்டு மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை தாதப்படுத்தாமல் உடனடியாக நிரப்ப வேண்டும்.

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் காலியாக உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதிவியிடத்தை உதவியாளர் நிலையிலிருந்து பதவி உயர்வு மூலம் காலதாமதமின்றி உடனடியாக நிரப்ப வேண்டும். செங்கல்பட்டு மாவட்டம் ஊராட்சி செயலாளர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான மூப்பு பட்டியலை காலதாமதமின்றி வெளியிட வேண்டும்,

மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் செய்ய வேண்டும் உள்ள்ளிட்ட 8தீர்மானங்களை ஏகமனதாக நிறைவேற்றி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில மையத்தின் முடிவின்படி தமிழக அரசையும்
மாவட்ட ஆட்சி தலைவரையும் இச்செயற் குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

மேலும் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற நவம்பர் 23 மற்றும் 24 தேதிகளில் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டத்தினை செங்கல்பட்டு மாவட்டத்தில் எழுச்சிகரமாக நடத்த இக்கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )