காட்டுக்காநல்லூர் ராமச்சந்திரகுளம் பகுதியில் அனுமதியின்றி குமரன் நகரில் வாய்க்கால் குறுக்கே சிறு பாலம் அமைப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி, கண்ணமங்கலம் அடுத்த அரசம்பட்டு செல்லும் சாலையில் கட்டுக்காநல்லூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரகுளம் பகுதியில் குமரன் நகர் என்ற வீட்டுமனை பிரிவு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மனை பிரிவில் ஒரு சதுர அடி மண்ணின் விலை ரூபாய் 790 ஆகும்.
இந்த குமரன் நகர் வீட்டுமனை பிரிவிற்கு சாலையில் இருந்து மனை பிரிவிற்கு உள்ளே செல்ல மனை பிரிவிற்கும் சாலைக்கும் இடையில் ஒரு வாய்க்கால் செல்கிறது. அந்த வாய்க்காலுக்கு மேலே ஒரு சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் எவ்வித அனுமதியும் இன்றி அமைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து மேற்கு ஆரணி ஓவர்சியர் சுஜாதா அவர்களை தொடர்பு கொண்டு இந்த சிறு பாலம் அமைப்பதற்கு முறையாக முன் அனுமதி பெறப்பட்டதா? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் எந்த அனுமதியும் பெறவில்லை என்பது இதே போல் உதவி பொறியாளர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரும் தன்னிடம் எவ்வித அனுமதியும் பெறவில்லை என்றே பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை வேங்கிக் காலில் உள்ள பெண் பொறியாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த அம்மையார் தன்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்று பதில் அளித்தார்.
இப்படி யாரிடமும் முறையாக அனுமதி பெறாமல் தான்தோன்றித்தனமாகவும், தனது விருப்ப படியும் இந்த குமரன் நகர் மனை பிரிவில் சிறு பாலத்தை அமைத்து அவர்கள் விருப்பம் போல மனையை விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முறையான அனுமதி பெறாமல் டிடிசிபி அனுமதி மட்டும் உள்ளது என்று விளம்பரம் செய்து மனையின் சதுர அடி ரூபாய் 790 என்று விளம்பரம் செய்து மனையை விற்க பார்க்கின்றனர் இந்த மனையின் உரிமையாளர்.
இந்த குமரன் நகரில் வீட்டுமனை வாங்குவோர் மனை பிரிவிற்கு உள்ளே செல்ல முடியாதவாறு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்த பாலத்தை இடிப்பதற்கு கூட அரசுக்கு உரிமை உண்டு என்று சொல்கின்றனர் நன்கு விவரம் அறிந்த சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.
இப்படி தான்தோன்றித்தனமாக இவர்களை சிறுபாலம் கட்டுவதற்கு யார் அனுமதி அளித்தது என்று கேட்டால் யாருமே இல்லை என்ற பதில்தான் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படி அவரவர் விருப்பம் போல் வீடு கட்டுவதற்கு இது என்ன அவர்களது சொந்த இடமா? அல்லது அரசு இடமா? என்பதற்கு இதுநாள் வரை விடை தெரியவில்லை.
ஆனால் அந்த உத்தரவில் வீட்டுமனை பிரிவு பகுதிக்கு உள்ளே செல்லும் சிறுபாலம் எப்போது வேண்டுமானாலும் எடுக்கப்படலாம் என்ற உத்தரவு மட்டும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆதலால் பொதுமக்கள் இந்த மனைப்பிரிவை வீட்டுமனை வாங்குவதற்கு முன்பு நன்கு யோசித்து, சிந்தித்து செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும், நன்கு விவரம் அறிந்தவர்களும் தெரிவிக்கின்றனர். ஆதலால் இந்த சிறு பாலம் அமைப்பதில் உள்ள சிறிய சங்கடத்தை நீக்கிவிட்டு முறையாக பாலம் அமைத்து பொதுமக்களுக்கு சேவை புரியுமாறு சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குமரன் நகர் வீட்டுமனை பிரிவு உரிமையாளர் முறைப்படி அரசு அதிகாரிகளை அணுகி இதற்கு அனுமதி பெறுவாரா? அல்லது அலட்சியம் காண்பிப்பாரா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.