BREAKING NEWS

காட்பாடியில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!  

காட்பாடியில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்!   

வேலூர் மாவட்டம், காட்பாடியில் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ஆர். கே. அப்புவுக்கு சொந்தமான இடத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். ஆர். கே. அப்பு தலைமை வகித்து இந்த இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: வேலூர் மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் நான் கலந்து கொண்ட ஒரு முகாமில் காட்பாடி செங்குட்டை பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி முகாமில் கலந்து கொண்டார். அப்போது அவர் தனது மகன் அவரை விட்டுவிட்டு சென்றதாக கூறி கண் கலங்கினார்.

ஆரம்பத்தில் பெற்றோர்களால் வளர்க்கப்படும் பிள்ளைகள் வயதான பெற்றோர்களை தவிக்க விட்டு விட்டு செல்வது நியாயம் அல்ல. அவர்களை பேணிக் காத்து பராமரிக்க வேண்டிய வயதில் அவர்களை தனிமைப்படுத்தக் கூடாது. அவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு உறுதுணையாகவும் வயதான காலத்தில் பிள்ளைகள் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

அத்துடன் இது போன்ற முகாம்களில் கலந்து கொண்டு இலவசமாக தங்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகளை முதியோர்கள் பெற்றுச் செல்ல வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா கிளினிக்குகள் அதிமுக ஆட்சி நிறைவு பெற்றவுடன் அடுத்து வந்த திமுக ஆட்சியினர் அதை மூடிவிட்டனர்.

இதனால் பலர் தவியாய் தவித்து வருகின்றனர். இதனால் வேலூர் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வாரந்தோறும் மூன்று நாட்களில் இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோன்று வேலூரிலும் வாரத்தில் மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிமுக அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள மருத்துவ வசதிக்கான அரங்குகளை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

அதிமுக ஆட்சி மீண்டும் மலர்ந்ததும் அம்மா கிளினிக்குகள் புத்துணர்வு பெற்று மீண்டும் செயல்பட தொடங்கும் என்று எஸ். ஆர். கே. அப்பு தனது சிறப்புரையில் குறிப்பிட்டு பேசினார்.

இந்த முகாமில் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் நிர்வாகிகள் நரேந்திரன், குமார், ரமேஷ் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுமார் 50க்கும் மேற்பட்ட முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகாமுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரோட்டரி கிளப் ஆஃப் வேலூர் மற்றும் வேலூர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS