காட்பாடியில் வந்தே பாரத் ரயில் நிறுத்த வேலூர் எம்பி கோரிக்கை

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார் கடிதத்தில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
எனது வேலூர் மக்களவைத் தொகுதி மக்களின் சார்பாக இந்த ரயிலை காட்பாடி அல்லது வாணியம்பாடி அல்லது ஆம்பூர் ஆகிய இடங்களில் நிறுத்துமாறு கேட் டுக்கொள்கிறேன். இது இப்பகுதியில் வாழும் மில்லியன் கணக்கான மக்களின் மிக அவசர மற்றும் முக்கியமான கோரிக்கையாகும் இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
CATEGORIES வேலூர்
TAGS அரசியல்காட்பாடிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த்