காட்பாடியில் 100% வாக்குப்பதிவவை வலியுறுத்தி “இந்திய” வரைபடம் மற்றும் “VOTE” என்ற வடிவில் நின்ற மகளிர் சுய உதவி குழுவினர்

காட்பாடியில் 100% வாக்குப்பதிவவை வலியுறுத்தி “இந்திய” வரைபடம் மற்றும் “VOTE” என்ற வடிவில் நின்ற மகளிர் சுய உதவி குழுவினர்
பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் 100% வாக்களிப்பது குறித்து பல்வேறு கட்ட விழிப்புணர்வுகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள் “இந்திய வரைபடம்” மற்றும் “VOTE” என்ற எழுத்து வடிவில் நின்று 100% வாக்களிப்பது குறித்து உறுதி மொழியை ஏற்றனர் மேலும் பறை மேளம் முழங்க இசைக்குழுவினர் நடனமாடி 100% வாக்களிப்பது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சரவணன் மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன்
உதவி திட்ட அலுவலர்கள் மற்றும் வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்