காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறையில் அதிமுக சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
அதிமுக பொது செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகின்றது.
இதனை அடுத்து வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிளித்தான் பட்டறை பகுதியில் அதிமுக 5-வது வட்டச் செயலாளர் K.விநாயகமூர்த்தி, துணை வட்ட செயலாளர் B.ரவி ஆனந்தி D.EEEஆகியோர் தலைமையில் சிறப்பு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முகாமினை துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ஜனார்த்தனன் அண்ணா ஆட்டோ ஓட்டுனர் சங்க பொருளாளர் கே.பி.ஆனந்தன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் உமாபேபி ஆனந்தன், உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.