காட்பாடி அடுத்த சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இன்று துவங்கியது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்காட்டில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம் இன்று வேலூர் இன்று பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியது இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் அவர்கள் சிறப்பு கலந்து கொண்டு உரையாற்றினார் மாணவர்களிடம்.
மாணவர்கள் மத்தியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் மாணவர்கள் தனி ஒழுக்கத்தை கடைப்பிடித்து ஆளும் தகுதியை பெற வேண்டும் இந்த இலவச பயிற்சி வகுப்புகளை சிறப்பாக சிறப்பான ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் டி.ஆறுமுகம் அவர்கள் தலைமை தாங்கி பேசுகையில் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்காகவும் உங்களைக் பல்கலை கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதியும் இலவச போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது ஆர்வமுள்ள மாணவர்களை திரையிடல் தேர்வின் மூலம் எடுத்து அவர்களுக்கு 100 பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படவுள்ளது என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளர் விஜயராகவன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் மேலும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி துணை பேராசிரியர் டாக்டர் சதீஷ் திருவள்ளுவர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் முனைவர் பி.கதிரேசன் மற்றும் முனைவர் ஜி.யோகானந்தம் உரையாற்றினார்கள் இலவச பயிற்சி வகுப்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் முனைவர் சீனிவாசன் துணை பேராசிரியர் வேதியல் துறை அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நன்றி உரையாற்றினார்.