BREAKING NEWS

காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விசிக மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் அறப்போராட்டம்: சமரசம் பேசிய வட்டாட்சியர்!

காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விசிக மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் அறப்போராட்டம்: சமரசம் பேசிய வட்டாட்சியர்!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்த்து பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.

இதுகுறித்த தகவல் அறிந்த விசிக வேலூர் மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட அருந்ததியின மக்களுடன் அறப்போராட்டம் தொடக்கம். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் சமரசம் பேசினார்.

காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட சொரக்கால்பட்டில் அருந்ததியின மக்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் 41 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை ஒரு குடும்பத்தினர் அதாவது தசரதன் என்ற 85 வயது முதியவரின் குடும்பத்தினர் கடந்த நான்கு தலைமுறைகளாக அனுபவித்த வருகின்றனர்.

இந்நிலையில் சல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி-புஷ்பா என்பவரது மகன் அருண் போலியாக பத்திரம் பதிவு செய்து வைத்துக் கொண்டு அருந்ததியின மக்களை விரட்டி அடித்து விட்டு ஜேசிபி உதவியுடன் அவர்களது இடத்தில் இருந்த சுமார் 250க்கும் மேற்பட்ட பச்சை பனை மரங்களை வெட்டி சாய்த்து அதை அருகில் உள்ள கானாற்றில் கொட்டி பெட்ரோல் ஊற்றி எரியூட்டியுள்ளார்.

ஆனால் பச்சை பன மரங்கள் எரியாமல் அப்படியே ஆங்காங்கே உள்ளது. இதனை கடந்த ஜூலை மாதம் நான்காம் தேதி அத்துமீறி அரங்கேற்றியுள்ளார் இந்த ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்த அருண் என்பவர். இவர் ரியல் எஸ்டேட் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால் ரியல் எஸ்டேட் மாஃபியாவான அருண் மீது அப்போதைய கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய தற்போது சேவூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் நிவேதா குமாரி என்பவர் எவ்வித புகார் அறிக்கையும் சமர்ப்பிக்காமல் சென்று விட்டார்.

இதையடுத்து தற்போது சேர்க்காட்டில் இருந்து வண்டறந்தாங்கல் கிராமத்திற்கு கிராம நிர்வாக அலுவலராக வந்துள்ள இளங்கோவனும் கண்டும் காணாமல் விட்டுவிட்டார்.

அத்துடன் அந்த இடமும் தங்களிடமிருந்து பறிக்கப்பட்டதாக அருந்ததியின மக்கள் கொதிக்க தொடங்கினர்.

இது குறித்த தகவல் அறிந்த வேலூர் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிலிப் மற்றும் காட்பாடி 1வது பகுதி செயலாளர் ராஜ்குமார் மற்றும் காட்பாடி முன்னாள் பொறுப்பாளர் முனுசாமி மற்றும் சிலர் சம்பவ இடமான சொரக்கால்பட்டிற்கு 23-ம் தேதி காலை 11 மணிக்கு வந்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த தசரதன் மற்றும் அவரது உறவினர்ஙள் அந்த இடத்தில் தங்களை சேர விடாமல் விரட்டியடிக்கும் அருண் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிலிப்பிடம் நடந்தவைகளைப் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார் தசரதன்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதற்காகவே விடுதலை சிறுத்தைகள் கட்சி செயல்படுகிறது என்றும், இது போன்ற பாமர மக்களின் துயர் துடைக்க ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று அவர்களிடம் விளக்கம் அளித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு தனது தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கனிவாக பேசி நடந்த சம்பவங்களை எடுத்துக் கூறி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்படி நியாயம் கிடைக்கவில்லை என்றால் இதே இடத்தில் அறப்போராட்டத்தை தொடங்கி நாள் முழுவதும் அதே இடத்தில் தங்குவதை தவிர தனக்கு வேறு வழி இல்லை என்பதை அரசு அதிகாரிகளுக்கு விளக்கி கூறினார் பிலிப். இதையடுத்து காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் வரும் வரையில் போராட்டம் தொடரும் என்று பிலிப் அறிவித்தார். இதையடுத்து பல்வேறு காரணங்களை கூறிப் பார்த்து வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திற்கு வராமல் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்தார்.

ஆனால் அவர் நினைத்தவாறு நடக்கவில்லை. நிலைமை மோசமாவதை அறிந்த காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாமர மக்களுக்கு குரல் கொடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பிலிப் முன்பு தரையில் அமர்ந்து சமரசம் பேசினார்.

இதையடுத்து அந்த அறப்போராட்டம் முடிவுக்கு வந்தது. அனைத்து விஷயங்களும் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பேசி இன்று 24 .9. 25 முற்பகல் 11 மணியளவில் அனைவரும் ஒன்று கூடி பேசி முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து விசிக மாவட்ட செயலாளர் ஃபிலிப் தனது அறப்போராட்டத்தை கைவிட்டார். அதை தொடர்ந்து பதட்டமான சூழ்நிலையில் இருந்த அந்த பகுதியில் மீண்டும் அமைதி நிலவ ஆரம்பித்தது.

இதைத் தொடர்ந்து பனை மரங்களை வெட்டி சாய்த்து பெட்ரோல் ஊற்றி எரித்த அருண் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்குமாறு வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவுக்கு உத்தர விட்டுவிட்டு வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் அங்கிருந்து புறப்பட்டார்.

இதை தொடர்ந்து அனைவரும் கலந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் “மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி அவர்கள் பாதிக்கப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு அவர்களின் நிலத்தை மீட்டு தருவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்“.

பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”

செய்தி ஆசிரியர் ச வாசுதேவன் 

CATEGORIES
TAGS