காட்பாடி அடுத்த மெட்டுக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள ஊராட்சி செயலர் மேசையில் அமர்ந்து கணினியில் விளையாடும் சிறுமிகள்: கண்டு கொள்ளாத ஊராட்சி செயலர்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மெட்டுக்குளம் ஊராட்சி செயல் பட்டு வருகிறது. இந்த மெட்டுக்குளம் ஊராட்சியில் செயலராக பெரியபுதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்த சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது பணியில் அலட்சியம் காண்பிப்பதோடு வருவோர், போவோரை எல்லாம் தனது இருக்கையில் அமர வைத்துவிட்டு அழகு பார்த்து வருகிறார். சரவணன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மெட்டுக்குளம் ஊராட்சியில் செயலராக பணியாற்றி வருகிறார்.
இவர் தன்னைச் சுற்றி அதிக அளவில் மகளிரை அமர வைத்துக்கொண்டு வேலை பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்று மெட்டுக்குளம் ஊராட்சியில் உள்ள கிராம பொதுமக்கள் கதை கதையாக கூறுகின்றனர்.
குறிப்பாக பிற்பகல் ஒரு மணிக்கு அலுவலகம் பூட்டப்பட்டவுடன் அத்துடன் அலுவலகத்தை திறப்பதே கிடையாது என்ற ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. இவ்வாறு இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
ஊராட்சி செயலர் சரவணன்
இதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதால் இந்த அலங்கோலம் மெட்டுக்குளம் ஊராட்சி அலுவலகத்தில் அன்றாட நிகழ்வாக மாறிக்கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று இவர் தனது இருக்கையில் இல்லாமல் வேறெங்கோ சென்று விட்டார். இந்நிலையில் இரண்டு சிறுமிகள் காலை 10 மணியளவில் சரவணனின் இருக்கையில் அமர்ந்து கொண்டு அங்கிருந்த கணினியை இயக்கியதோடு, அங்கிருந்த அரசு ஆவணங்களையும் எடுத்து விளையாடிக் கொண்டிருந்ததை அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா மற்றும் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் இளங்கோ, ஊம துணை தலைவி மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இருந்தும் யாரும் அதை கண்டு கொள்ளவே இல்லை.
இப்படி ஒரு அரசு அலுவலகத்தை விளையாடும் இடமாக மாற்றி வைத்துள்ளார் இந்த ஊராட்சி செயலர் சரவணன் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஏனென்றால் அவ்வளவு சகஜமாக ஒரு அரசு அலுவலகத்துக்குள் புகுந்து கணினியை எடுத்து விளையாடும் அளவிற்கு சிறுவர், சிறுமியர்களுக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது மிகவும் வெட்கக்கேடானது, வேதனைக்குரி யது ஆகும்.
குறிப்பாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசு விதி (GO) ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் பின்பற்றி நடந்து கொள்வதே இல்லை. இங்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு காற்றிலே பறக்க விடப்பட்டுள்ளது.
ஊராட்சி செயலர் அலுவலகம்
அதன் விளைவு தான் இந்த சரவணன் தொடர்ந்து மெட்டுக்குளத்திலேயே நிரந்தரமாக டென்ட் அடித்துக் கொண்டு பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற பணியில் அலட்சியம் காண்பிப்பது மற்றும் தனது இருக்கையில் யார் வேண்டுமானாலும் அமர்ந்து கொள்ளலாம் என்பது இதற்கெல்லாம் அடிப்படை காரணம் அனைவரும் நமது உறவினர்கள் என்ற ரீதியில் இவர் இங்கு பணியாற்றி வருகிறார் என்பதும் ஒரு மறைமுக காரணமாக கூறப்படுகிறது.
அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் நம்மை யாரும் ஒன்றும் அசைக்க முடியாது என்ற ரீதியில் இவர் தெனாவெட்டாக, தான் தோன்றித்தனமாகவும் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் என்ன கூறுகிறாரோ அதுதான் இந்த பகுதியில் எழுதப்படாத சட்டமாக நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஒரு அரசு அலுவலகம் அலங்கோலமாக ஆவதற்கு இசைவு தெரிவிப்பது தான் இந்த சரவணனின் தலையாயக் கடமை என்று தெரியவந்துள்ளது.
வேலூர் மாவட்ட நிர்வாகம் இது போன்ற ஒன்றும் அறியாத விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர், சிறுமிகளை தனது கணினியில் உட்கார வைத்து விளையாட அனுமதி அளித்த, தொடர்ந்து அனுமதி அளித்து வரும் ஊராட்சி செயலர் சரவணன் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அவரை வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பது வெட்டுக்குளம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இதை மாவட்ட நிர்வாகமும் கண்டும் காணாமல் விட்டுவிட்டால் சரவணனின் கை ஓங்குவதோடு மட்டுமின்றி அவர் இனி யாருக்கும் ஒரு அரசு பணியாளருக்கு உண்டான பயமின்றி பணியாற்றத் தொடங்கி விடுவார் என்பது மட்டும் நிதர்சன உண்மையாகும்.
அத்துடன் அரசு உயர் அதிகாரிகளையும் சரவணன் மதிக்க மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தத்தில் இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகமும் அல்லது தமிழக முதல்வரும் நேரடியாக இப்படி நடப்பது முறையானதா? சரியானதா? என்பதை சீர்தூக்கி பார்த்து ஒரு முறையான ஒழுங்கு நடவடிக்கையை சரவணன் மீது எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
சரவணன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது கிடப்பில் போடப்படுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படிப் பணியில் அலட்சியமுடன் செயல்பட்டு வரும் சரவணன் போன்றோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்ற ஊராட்சி செயலர்களுக்கு ஒரு பாடமாக, முன் உதாரணமாக அமைய வேண்டும் என்பதே அனைவரது ஆவலாகும், எதிர்பார்ப்புமாகும் .
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்