BREAKING NEWS

காட்பாடி அடுத்த லத்தேரியில் கூலி தொழிலாளி படுகொலை ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை மீட்டு லத்தேரி போலீசார் தீவிர விசாரணை.

காட்பாடி அடுத்த லத்தேரியில் கூலி தொழிலாளி படுகொலை ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை மீட்டு லத்தேரி போலீசார் தீவிர விசாரணை.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (65) இவர் அதே பகுதியில் தேங்காய் தோல் உரிக்கும் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு திருமணம் ஆகி ஹேமாவதி என்ற மனைவியும் ஒரு டில்லி பாபு என்ற மகனும் ஜெயலட்சுமி மகளும் உள்ளனர். என்ன நிலையில் செல்வம் தனது மனைவி ஹேமாவதியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட செல்வத்திற்கு கருப்பன் முருகேசன் ராஜகோபால் என மூன்று சகோதரர்களும் மற்றும் ராஜகோபால் மகன் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற சுரேஷ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் மனைவியை பிரிந்த செல்வம் மகள் ஜெயலட்சுமி வீட்டில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று இரவு அதிக அளவில் மது அருந்திய செல்வம் மகளின் வீட்டிற்கு வந்துள்ளார். குடித்திருந்ததால் மகள் வீட்டிற்குள் படுக்க வேண்டாம் வெளியில் சென்று படுத்துக் கொள் என்று ஒரு பாயை எடுத்து கொடுத்துள்ளார்.

வீட்டு வாசலில் பாய் போட்டு படுத்து இருந்த செல்வம் விடியற்காலை தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக இருப்பதை பார்த்த அருகில் உள்ளவர்கள் வீட்டின் உறங்கிக் கொண்டிருந்த செல்வத்தின் மகள் ஜெயலட்சுமி மற்றும் அவரது கணவர் பிரபாகரிடம் தகவலை சொல்லி உள்ளனர்.

பதறி அடித்து ஓடி வந்த ஜெயலட்சுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த தந்தை செல்வத்தின் உடலை பார்த்து கதறி அழுதுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உடனடியாக அருகில் உள்ள லத்தேரி காவல் துறையினர் தகவல் அளித்ததின் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை வருகின்றனர்.

செல்வத்திற்கும் அவரது உறவினர்களுக்கும் நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதில் ஏற்கனவே தகராறு இருந்ததாகவும் சொத்து பிரச்சனையும் இந்த கொடூர கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விசாரணையில் இவருக்கும் உறவினர்களுக்கும் சொத்து பிரச்சனை இருந்துள்ளது தெரியவந்துள்ளது.  இதனால் கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் லத்தேரி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லத்தேரி காவல் நிலையம் பின்புறம் கொலை அரங்கேறியுள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பீதியையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS