BREAKING NEWS

காட்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிங்கவால் குரங்கு பலி!

காட்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிங்கவால் குரங்கு பலி!

காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இந்த வள்ளிமலை கோயிலில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் வள்ளிமலை -சேர்க்காடு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிங்கவால் குரங்கு ஒன்று இறந்து கிடந்தது.

இதைப்பார்த்த அந்தப்பகுதி பொதுமக்கள் மனிதர்களுக்கு செய்யப்படும் இறுதிச்சடங்குகளைப் போல் சடங்குகள் செய்து, சிங்கவால் குரங்கின் உடலுக்கு பால் ஊற்றி, மாலை மரியாதையுடன் அடக்கம் செய்தனர். இது வனவிலங்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this…

CATEGORIES
TAGS