BREAKING NEWS

காட்பாடி அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீர்… சாலை வசதி ஏற்படுத்தி தர மக்கள் கோரிக்கை.

காட்பாடி அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ள மழை நீர்… சாலை வசதி ஏற்படுத்தி தர மக்கள் கோரிக்கை.

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக பொதுமக்கள் எச்சரிக்கை…

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள வஞ்சூர் கிராமத்தில் வஞ்சியம்மன் கோவில் பின்புறம் லட்சுமி நகர் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர் அப்பகுதியில் சரியான சாலை வசதியும் மற்றும் கழிவு நீர் கால்வாய்களும் இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

மேலும் அப்பகுதியில் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் குழந்தைகள் உள்ளதால் அங்கு காலி இடங்களில் தேங்கும் மழை நீரால் துர்நாற்றம் வீசுவதாகவும் டெங்கு உள்ளிட்ட தோல் வியாதிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மேலும் விஷ ஜந்துக்கள் ஆன பாம்பு உள்ளிட்டவைகள் குடியிருப்பு பகுதிக்குள் அடிக்கடி புகுந்து அட்டகாசம் செய்வதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் இதனை சரி செய்ய தொடர்ந்து பலமுறை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

 

மேலும் அப்பகுதியில் மழைக்காலங்கள் வந்தால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையும் நிலவி வருவதாகவும் மேலும் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் பச்சிளம் குழந்தைகள் ஆகியோர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் ஆகியவற்றை உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுத்து தீர்வு காணாவிடில் தங்களது குடும்ப அட்டை ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக அப்பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

CATEGORIES
TAGS