காட்பாடி அருகே 300 கிலோ ரேஷன் அரிசி ஆட்டோ பறிமுதல் ஒருவர் கைது குடிமைப் பொருள் வழங்க குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் நடவடிக்கை.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பனமடங்கி-பரதராமி கூட்டு சாலையில் இன்று குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வாளர் வனிதா தலைமையில் தலைமை காவலர்கள் பாலமுருகன், ராஜவேல், முதல் நிலைக் காவலர் வெங்கடேசன் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் தமிழக அரசால் வழங்கப்படும் 300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் 300 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்து ரேஷன் அரிசியை கடத்தி வந்த பூசாரி வலசை கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் வயது (31) கைது செய்து வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜே-எம்-4 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.