BREAKING NEWS

காட்பாடி அருப்புமேடு பகுதியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு விழா அனுசரிப்பு.

காட்பாடி அருப்புமேடு பகுதியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் புத்தாண்டு விழா அனுசரிப்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அருப்புமேடு பகுதியில் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு விழா அனுசரிக்கப்பட்டது.

 

 

இத்தமிழ் புத்தாண்டு விழா இந்தியன் ரெட் கிராஸ் சங்க காட்பாடி வட்ட அவை தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாநகராட்சி 12-வது வார்டு மாம்மன்ற உறுப்பினர் டீட்டா சரவணன் கலந்து கொண்டு அப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சர்க்கரைப் பொங்கலை வழங்கினார்.

 

 

இந்த நிகழ்ச்சியில் செயலாளர் எஸ்.எஸ்.சிவ வடிவு, அவை துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர் டி.வேணுகோபால் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் வேதக்கண்தன்ராஜ், மேலாண்மை குழு உறுப்பினர்கள் தீனபந்து, எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், காந்திலால் பட்டேல், லட்சுமி நாராயணன், மோகன், ராஜி, பாஸ்கர், சேட்டு, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS