காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி அருகே மாம்பழம் ஏற்றி வந்த டிராக்டர்கள் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு: போக்குவரத்துக்கு கடும் இடையூறு!

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை தமிழக எல்லை பகுதியில் மாம்பழ லோடு ஏற்றி வந்த டிராக்டர்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதன.
இந்த மாம்பழ லோடுகள் அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மாம்பழ கூழ் தயாரிக்கும் நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்டவை ஆகும். அந்த தனியார் ஆலையில் தினமும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அரவை மட்டுமே நடைபெறுவது வழக்கமாம்.
இதனால் டிராக்டர்களில் ஏற்றி வரப்பட்ட மாம்பழங்கள் பாரத்தினுடனேயே சாலையின் இருபுறமும் ஐந்து முதல் ஒரு வாரம் வரை காத்திருந்து வரிசைப்படி பாரத்தை அந்த தனியார் மாம்பழ கூழ் தயாரிக்கும் நிறுவனத்தில் இறக்கிவிட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் சாலையின் இருபுறமும் கடலூர் -சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடியின் அருகே டிராக்டர்கள் இரவு, பகல் பாராது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கனரக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சொல்லொனா துயரத்துக்கு ஆளாகின்றனர். இப்படி சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாம்பழ லோடுடன் உள்ள டிராக்டர்களை அப்புறப்படுத்தி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஏதாவது குக்கிராமத்தில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே வாகன ஓட்டுநர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும், வேண்டுகோளாகவும் மாறி உள்ளது.
இப்படி ஒட்டுமொத்த வாகன ஓட்டிகளின் வேண்டுகோளை ஏற்று இந்த மாம்பழ லோடுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டிராக்டர்கள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
இதற்குப் பிறகும் இந்த டிராக்டர்கள் அப்புறப்படுத்தப்படுமா? அல்லது வழக்கம்போல் சாலையோரம் நிறுத்தி வைக்கப்படுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.