BREAKING NEWS

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது.

காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது.

விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக தின ஆண்டு விழா மற்றும் விளையாட்டு தின விழா நடைபெற்றது விஐடி பல்கலைக்கழக வேந்தர் G.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற
விழாவில் பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

 

 

விழாவில் பேசிய முருகேசன்,

உயர்கல்வி, மற்றும் வேளாண்மையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக இருக்கிறது தேசிய கல்வி கொள்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் அதை தமிழ்நாடு அடைந்துவிட்டது.

 

இந்தியாவில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அதிகம் இருப்பது தமிழ்நாட்டில்தான். இங்கு மட்டும் 28 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன.கல்வியில் நல்ல நிர்வாகம், ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். ஆசிரியர்கள்தான் முதுகெலும்பாக திகழ்கின்றனர்.

 

 

ஆராய்ச்சி படிப்புகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகம் நிதி ஒதுக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும்
என்று கூறினார்.

CATEGORIES
TAGS