BREAKING NEWS

காணவில்லை !! காணவில்லை !!!!!!நீர்வரத்து குளம், குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் !

காணவில்லை !! காணவில்லை !!!!!!நீர்வரத்து குளம், குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் !

குளம் புறம்போக்கை ஆக்கிரமிப்பு செய்யும் திமுக ஊராட்சி மன்ற தலைவர் !

காணவில்லை!! , காணவில்லை!!!

வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், கனிக்கனியான் ஊராட்சி, கனிக்கனியான் குளம் புறம்போக்கு அருகில் நீர்பிடிப்பு பகுதி உள்ளது.

தற்பொழுது நீர்பிடிப்பு பகுதி குளம், களம் புறம்போக்கு பகுதிகளை திடீரென காணவில்லை ????. ஏற்கனவே எரிமண் செங்கல் சூளைகளுக்கு லாரி, லாரியாக கடத்தப்பட்ட நிலையில், களம் புறம்போக்கு, நீர் பிடிப்பு குளம் ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்க , பிளாட் போட்டு விற்பனை செய்ய ஏற்படுகளை செய்து வருகின்றார்கள்.

இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்துறை , வேலூர் தாசில்தார் இல. வடிவேலு, கனிக்கனியான் கிராம நிர்வாக அலுவலர், கணியம்பாடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் என அனைவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

கும்பகர்ணனைப் போல  தூங்கி விட்டார்களா ?. ஏற்கனவே உயர் நீதிமன்ற தீர்ப்பின் அரசாணை எண் 540 மற்றும் 64ன் படி நீர்நிலைகள் மற்றும் வாய்க்கால் நீர்நிலை ஓடைகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் ஆக்கிரமிப்பாளர்கள். ஆக்கிரமிப்பு செய்த கட்டடங்கள், குடியிருப்புகள் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டு வரும் நிலையில்,

தற்போது இந்த களம் புறம்போக்கு, நீர் வழி குளத்தை மூடி பிளாட் போட்டு வியாபாரம் செய்வதை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கைகட்டி, வாய்பொத்தி அமைதியாக வேடிக்கை பார்த்து வருகின்றார்.

மாவட்ட நிர்வாகமும், வருவாய் துறையும் சம்மந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகம் ஆட்சி, அதிகாரம் ஆணவத்துடன் கிராமத்தையே துண்டாட நினைக்கின்றது. அத்துடன் இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போகும் நபர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

என்கின்றனர் கணிகனியான் ஊர் பொதுமக்கள். வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு இடங்களை மீட்குமா? அல்லது மீண்டும் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்து கொண்டு கண்டும் காணாமல் விட்டு விடுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS