காமராஜர் சிலை மறைக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில்
ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் இருக்கும் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர் , காமராஜர் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டது
காமராஜர் சிலை மறைக்கப்பட்டதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என்று நேற்று மாலை அறிவிப்பு வெளியானது
இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் இருக்கும் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மறைக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் இருக்கும் முன்னாள் முதல்வர் அண்ணாவின் சிலை
வைகை அனை சாலை பிரிவில் இருக்கும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலை
கடைவீதி அருகே இருக்கும் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆகியோர்களது சிலைகள் போலீசார் முன்னிலையில் பேரூராட்சி பணியாளர்களால் துணிகள் மற்றும் பேனர்கள் மூலம் மறைக்கப்பட்டது
அப்போது முன்னாள் முதல்வர் காமராஜரின் சிலையை மறைக்க முற்பட்டபோது காமராஜரின் ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காமராஜரின் சிலையை மட்டும் மூடாமல் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமலை நாயக்கரின் சிலையையும் மேலத்தெரு பகுதிக்கு அருகே உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைகளை மூட வேண்டியது தானே என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அப்போது போலீசார் தேர்தல் விதிமுறைப்படி முன்னாள் அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மட்டுமே மறைக்கப்படுகிறது என்றும் தேசிய தலைவர்களின் சிலைகள் மறைக்கப்படுவதில்லை என்றும் விளக்கிக் கூறியதையடுத்து
வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர்
காமராஜர் சிலை மறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது