கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தாக்குதல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு பிரிவு மூலம் கால்நடைகளுக்கு நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
எனவே தற்பொழுது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெரிய அம்மை நோய் தாக்குதல் பரவலாக பரவி வருவதால் தேனி மாவட்டத்தில் கால்நடைகளை பாதிக்கும் பெரியம்மை நோயை தடுக்கும் முறையில் தமிழ்நாடு கால்நடை துறையின் மூலம் நோய் புலனாய்வுதுறை மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பாதிக்கப்பட்டுள்ளதா, என முகாம் நடத்தி பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த முகாமில் பெரியம்மை நோய் பாதிப்பு அறிகுறி தெரியும் கால்நடைகளுக்கு ரத்த மாதிரி எடுத்து மருத்துவ குழுவினர் ஆய்வுக்கு எடுத்து வருகின்றனர். மேலும் இந்த முகாமில் கால்நடைகளுக்கு மலடு நீக்கும் சிகிச்சை, குடற்புழு நீக்கம் செய்தல், வளர்ச்சி குறைபாடு கண்டறிதல், மடி நோய் முந்தைய நிலையை கண்டறிதல், உள்ளிட்ட நோய் தடுப்பு குறித்து சோதனையை தமிழ்நாடு கால்நடை மருத்துவத்துறையை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.