காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

நிலக்கோட்டையை அடுத்த அம்மைநாயக்கனூர் காவல் நிலையத்தில் விவசாயி கொடுத்த புகாருக்கு வழக்குப்பதிவு செய்ய தாமதித்ததாக கூறி காவல் நிலையம் முன்பு விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு அருகே உள்ள கன்னிமார் நகரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் சதீஷ்கண்ணன் (23) கடந்தாண்டு அவரது தோட்டத்தின் அருகே உள்ள நாச்சியப்பன் என்பவரது தோட்டத்தில் வாழைக்காய், மாங்காய்களை திருடுடியதாக கூறி அம்மையநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணை செய்த காவல்துறையினர் பாண்டி உட்பட மூன்று பேர் மீது வழக்குபதிவு செய்து பாண்டியை சிறையிலடைத்தனர், இருதரப்பினரது தோட்டமும் அருகருகே உள்ளதால், சிறையிலிருந்து வெளியே வந்த பாண்டி மற்றும் அவரது மகன் சதீஸ்கண்ணன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் நாச்சியப்பனை சீண்டுவதும் தகாத வார்த்தைகளில் திட்டுவதுமாக தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தினமும் இருசக்கர வாகனத்தில் அவர்கள் அதிவேகமாக வந்து அச்சுருத்தி வந்ததாக கூறப்படுகிறது, இதனை நாச்சியப்பனும் அவரது நண்பர்களும் கண்டித்தாக தெரிகிறது,அதுகுறித்து காவல்நிலையத்தில் பாண்டி புகார் அளித்தார்.
புகாரைப் பெற்ற காவல் துறையினர் விசாரணை செய்து இருதரப்புகும் இடையே அடிக்கடி மோதல் போக்கு ஏற்பட்டு காவல்நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்து வந்ததால், சிறிய பிரட்சனை என கருதி மனுரசீதை மட்டும் கொடுத்து அனுப்பி விட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியே வந்த பாண்டி மதுபோதையில் நேற்று முன்தினம் மாலை காவல் நிலையத்திற்குச் சென்று குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி தான் மறைத்து வைத்திருந்த மருந்து பாட்டிலில் இருந்த பூச்சிமருந்தை குடித்ததாக கூறப்படுகிறது.
அவரை மீட்ட காவல்துறையினர் உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,இதனை அடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாண்டி நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அமையநாடக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி நிலக்கோட்டை டிஎஸ்பி முருகன் ஆகியோர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
காவல் நிலைய முன்பு விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் ம.ராஜா