கிணற்றில் குளித்த வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு. அரியூர் போலீசார் விசாரணை..

வேலூரில் கிணற்றில் குளித்த வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்பு.
வேலூர் மாவட்டம் வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்(34), வேலூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்கிறார்.
இவர் தனது நண்பர்களுடன் அரியூர் ஸ்ரீபுரத்திலுள்ள கிணற்றில் வியாழக்கிழமை குளித்துள்ளார். ஜெய்சங்கருக்கு நீச்சல் தெரியாததால் அவர் கிணற்று தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதுகுறித்து அவரது நண்பர்கள் அளித்த தகவலின்பேரில் வேலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து நீரில் மூழ்கிய ஜெய்சங்கரின் உடலை மீட்டனர். தொடர்ந்து அரியூர் போலீஸôர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து ஜெய்சங்கரின் மனைவி கீர்த்தனா அளித்த புகாரின்பேரில் அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES வேலூர்
TAGS கிணற்றில் குளித்த வியாபாரி நீரில் மூழ்கி உயிரிழப்புகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வேலூர் ஓல்டு டவுன்வேலூர் தீயணைப்பு நிலையம்வேலூர் மார்க்கெட்வேலூர் மாவட்டம்