BREAKING NEWS

கிருஷ்ணகிரியில் வயதான முதியோரை தாக்கி 50 பவுன் நகை கொள்ளை – முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை.

கிருஷ்ணகிரியில் வயதான முதியோரை தாக்கி 50 பவுன் நகை கொள்ளை – முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை.

கிருஷ்ணகிரி மாவட்டம் சப்பானிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆன இவர், தனது மனைவி சென்னம்மாளுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு ரங்கசாமி சென்னம்மாள் இருவரும் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தபோது. முகமூடி அணிந்த மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்துள்ளது.

 

இதனைக் கண்ட முதியவர்கள் கூச்சலிட்டனர். அப்போது கொள்ளை கும்பல் கத்தியை காட்டி இருவரையும் மிரட்டி உள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த 50 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள், 3 லட்சம் ரூபாய் உள்ளிட்டவை கொள்ளையடித்து சென்றனர்.

 

 

இதனால் அதிர்ச்சி அடைந்த முதியவர் ரங்கசாமி காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கைரேகை நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 25 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பலை தேடி வருகின்றனர். வயதான முதியவர்களை கத்தி முனையில் தாக்கி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பட்ட பகலில் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் பர்கூர் அருகே தபால் மேடு பகுதியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் டாஸ்மார்க் ஊழியர்களை தாக்கி 4 லட்ச ரூபாய் கொள்ளை அடித்து சென்றனர்.

 

 

கடந்த இரு வாரங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். முகமூடி அணிந்து வந்த கொள்ளை கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS