கீழ்குப்பம் பகுதியில் விவசாய நிலத்தில் குழாய் மற்றும் டிவி திருடிய நபரை அதிரடியாக கைது செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.
23.06.2023-ம் இரவு கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் காவல்நிலைய எல்லைக்குப்பட்ட V.மாமாந்தூர் கிராமத்தில் ராமசாமி மகன் மணி என்பவர் நிலத்தில் இருந்த சொட்டு நீர் பாசன பைப் ரோல் மற்றும் பொன்னுசாமி மகன் கலியமூர்த்தி என்பவர் நிலத்தில் உள்ள கொட்டாயில் இருந்த CCTV கேமராவின் DVR Playar மற்றும் ஒரு LED TV ஆகியவற்றை அடுத்தடுத்து திருடி சென்றுவிட்டதாக கொடுத்த புகார் மனுவை பெற்று கீழ்குப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் குற்றவாளியை உடனடியாக கைது உத்தரவிட்டார் அதன்படி கீழ்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வபாண்டியன் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வந்தநிலையில் வீரபயங்கரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சின்னசேலம் வட்டம்,
தென்செட்டியந்தல் கிரமத்தை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் வெங்கடேசன் என்பவரை விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரனாக பேசியவர் காவல்துறை விசாரணைக்கு பின்பு V.மாமாந்தூர் கிராமத்தில் ஓரே நாளில் சொட்டு நீர் பாசன பைப் ரோல் (மதிப்பு சுமார் 18,000/-) மற்றும் CCTV கேமராவின் DVR Playar மற்றும் ஒரு LED TV (மதிப்பு சுமார் 20,000/-) -ஐ திருடி சென்றது தெரிய வரவே மேற்படி குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.