BREAKING NEWS

குஜராத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த பேருந்து மீண்டும் ஊருக்கு திரும்பும் வழியில் கொடைக்கானல் வத்தலகுண்டு சாலையில் உள்ள டம் டம் பாறை அருகே பிரேக் பிடிக்காமல் சாலையின் தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு சிறு காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர்

திண்டுக்கல் மாவட்டம் சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு குஜராத் மாநிலம் பான கா சிட்டி என்ற பகுதியைச் சேர்ந்த 41 பேர் தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்து பிரசாந்த் என்பவர் ஓட்டுனராக கடந்த பதினெட்டாம் தேதி குஜராத்தில் இருந்து கிளம்பிய பேருந்து மைசூர் ஊட்டி பழனி மற்றும் கொடைக்கானலுக்கு சென்று விட்டு இன்று மதுரை செல்வதற்காக கொடைக்கானலில் இருந்து திரும்பிய போது டம் டம் பாறை அருகே பேருந்தில் பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரை உடைத்து பள்ளத்தில் இறங்கியது அதிர்ஷ்டவசமாக மரத்தின் மீது மோதியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

பயணம் செய்த 20ஆண்கள் மற்றும் 22 பெண்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் விபத்தால பேருந்தில் இருந்து அனைவரையும் பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து காப்பாற்றினார் காயங்களுடன் இருந்த பயணிகளை வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )