குடியரசு தின முன்னேற்பாடு பணியில் ஈடுபட்ட தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர் மாரடைப்பால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு 7 மணி அளவில் உயிரிழப்பு.
குடியரசு தின முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்த தஞ்சாவூர் நகர கிராம உதவியாளர் செல்வராஜ் வயது 56 மாரடைப்பால் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் தஞ்சாவூரில் இன்று குடியரசு தின நிகழ்ச்சிகள் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
பின்னர் அனைத்து துறை சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
இதையொட்டி வருவாய் துறை சார்பில் தஞ்சாவூர் நகர கிராம உதவியாளராக கீரை கொல்லை வருவாய் கிராமத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் செல்வராஜ் ( 56) என்பவர் கொடிகள், தோரணங்கள் கட்டுவது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டிருந்தார்.
பின்னர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள விருந்தினர்களுக்கான நாற்காலிகளை ஏற்றிக்கொண்டு ஆயுதப்படை மைதானத்திற்கு வருவதற்கு சென்றார்.
அங்கே நேற்று இரவு சுமார் 7 மணியளவில் விருந்தினர்களின் நாற்காலிகளை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு வெளியே இருந்த வாகனத்திற்கு வரும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அங்கு பணியில் இருந்த சக வருவாய்த்துறையினர் அவரை தாங்குதலாக பிடித்து உட்கார வைத்து அவருக்கு தண்ணீர் கொடுத்தனர்.
ஆனால் அவர் சிறிது நேரத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார் பின்னர் அவரை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் குடியரசு தின விழாவில் ஈடுபட்டிருந்த வருவாய் துறை ஊழியர் உயிரிழந்தது வருவாய் துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர் கடந்த சுமார் 20 ஆண்டுகளாக கிராம உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார் இவருக்கு மனைவி மூன்று மகள்கள் இரண்டு மகன்கள் உள்ளனர்.