குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை.

குடியாத்தம், உழவர் சந்தை மற்றும் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி தீயிட்டு கொளுத்துவதால் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை

வேலூர் மாவட்டம்
குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் இருந்து சேகரிக்கபடும் குப்பைகளை நகராட்சி வாகனம் மூலம் கொண்டு சென்று குப்பை கிடங்குகளில் கொட்டாமல் குடியாத்தம் நகர மையப்பகுதியான உழவர் சந்தை அருகே குப்பைகளை கொட்டி வருகின்றனர்.
அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் உழவர் சந்தை மற்றும் காய்கறி மார்கெட் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அருகே குப்பைகளை கொட்டி துர்நாற்றமான குப்பைகளை தீயிட்டு கொளுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து,

காற்றுடன் புகை பரவுவதால் குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் மற்றும் சாலையில் செல்லும் அசுத்தமான காற்று சுவாசிப்பதால் சுவாசக் கோளாறு ஏற்படுகிறது.

இதனால் குடியாத்தம் நகரின் மையப் பகுதியில் குப்பைகளை கொட்டாமல் நகராட்சி குப்பை கிடங்கு களுக்கு எடுத்துச்சென்று கொட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
