குடியாத்தம் காதலிக்க மறுத்த மாணவியை தாக்கிய வாலிபர் கைது..

வேலூர் மாவட்டம்; குடியாத்தம் டவுன் கொச அண்ணாமலை தெருவை சேர்ந்த சரவணன், ஜவுளிக்கடை உரிமையாளர். இவரது மகன் சந்துரு வயது 23 இவர் கடந்த சில மாதங்களாக 18 வயது மாணவியை காதலிக்க வற்புறுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டு இருந்த மாணவியை வழிமறித்த சந்துரு காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்பொழுது அந்த மாணவிக்கும் சந்துருவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சந்துரு சக மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவியை காதலிக்க வற்புறுத்தி சரமாரியாக தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு வந்த மாணவி அழுது கொண்டு இருந்தார். சக மாணவ மாணவிகள் முன் தன்னை அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த அந்த மாணவி கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்து உள்ளார்.
இதைப் பார்த்த அவரது பெற்றும் மற்றும் அக்கம் பக்கத்தினர் மாணவி மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியை காதலிக்க வற்புறுத்தி தாக்கிய சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.மணிவண்ணன் உத்தரவின் பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.