குடியாத்தம் கீழ்பட்டி கிராமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற கபடி போட்டி ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்பட்டி கிராமத்தில் வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் ஆண்கள், பெண்கள் (சீனியர்) சாம்பியன்ஷிப் போட்டி 2 இரண்டு நாட்கள் நடைபெற்றது இதில் டி.பி.ஏ.நண்பர்கள் குழுவானது வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்துடன் இணைந்து நடத்தியது.
இந்த கபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் 45 பணிகளும் பெண்கள் பிரிவில் 6 அணிகளும் பங்கேற்று விளையாடினர் இந்தப் போட்டியை வேலூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் துணைத் தலைவர் இரா.சி.தலித் குமார் தொடக்கிவைத்தார்.
அமைப்பின் மாவட்டப் பொருளாளர் அம்மன் கே.ரவி, சர்வதேச நடுவர் பி.கோபாலன் மற்றும் பலர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், ஆளுயர கோப்பையும் இரண்டாம் பரிசு ரூ.15 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.7 ஆயிரம் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியின் நடுவர்களாக வி.துளசி, எம்.நவமணி, பி.பாலகிருஷ்ணன், எம்.சுந்தர், டி.மோகன், சோழப்பாண்டியன், ஆர்.எம்.கிருஷ்ணன், எழிலரசன், ஜே.ராஜா, ஜெகன் மற்றும் பலர் பணியாற்றினர். அனைத்து வீரர்களுக்கும் தங்குமிடம், உணவு வசதியை புரட்சி பாரதம் வெங்கடேசன் செய்திருந்தார்.
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான கபடி போட்டியை குடியாத்தம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.