BREAKING NEWS

குடியாத்தம் தனியார் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு.

குடியாத்தம் தனியார் மகளிர் கல்லூரியில் 2ம் ஆண்டு பட்டமளிப்பு விழா புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்பு.

ஜிப்மர் மருத்துவமனையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை.

அலுவலகம் செல்லும் பெண்களின் ஓய்வுக்காக வெள்ளிகிழமை 2 மணி நேரம் ஓய்வு சலுகை வழங்கபடுகிறது. தமிழிசை சௌந்தரராஜன் குடியாத்தத்தில் பேட்டி.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ அபிராமி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு கல்லூரியில் இளங்கலை படிப்பு முடித்த மாணவிகள் 200 பேருக்கு பட்டமளித்து வாழ்த்துரை வழங்கினார்.

 

முன்னதாக அவர் பேசியதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கல்லூரி அபிராமி கலைக்கல்லூரி அபிராமி என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி அபிராமி அந்தாதி மேற்கோள் காட்டி தனம் தரும் கல்வி தரும் என்று கூறி அபிராமி கல்லூரி தனத்தையும் கல்வையும் கொடுத்து எந்த ஒரு லாப நோக்கமும் இல்லாமல் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனம்.

 

பெண்கள் எல்லாம் முன்னேறி விட்டார்கள் என்றால் நிச்சயமாக இல்லை பெண்கள் வாழ்கின்ற வாழ்க்கை தற்போது சவாலாக உள்ளது. பெண்கள் பாரதிதாசன் கூறியது போல கல்வி கற்க வேண்டும் யாரும் உங்கள் தன்னம்பிக்கையை குழைத்தால் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் நல்ல முயற்சி எடுத்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்,.

 

அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் திருமணம் என்பது நம் கல்வியையும் வாழ்க்கையும் தடை செய்யக்கூடாது வாழ்க்கையில் தைரியமும் தன்னம்பிக்கை வேண்டும்.தற்போது மத்திய அரசில் கர்னல் கமாண்டர் பணியில் 244 பேரில் 133 பெண்கள் ராணுவத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் வாழ்வியலை மீறி பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர்.

 

 

நாம் நினைப்பது போல் வாய்ப்புகள் கிடைக்காது கிடைக்கின்ற வாய்ப்பை நான் நினைப்பது போல் மாற்றிக் கொள்ள வேண்டும் தாய் தந்தையின் விருப்பத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் மாணவிகள் இன்று கருப்பு கோர்ட் அணிந்து பட்டம் பெறுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு பெற்றோர்கள் செய்த தியாகமே காரணம் மாணவிகள் தாய் தந்தைகள் செய்த தியாகத்தை மறக்காமல் அவருக்கு நன்றி உள்ளவர்களாக விளங்க வேண்டும்.

 

 

அதேபோல் ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய நன்றி என்னை போன்றவர்கள் இன்று மேடையில் நிற்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு ஆசிரியர்கள் தான் காரணம் பெண்கள் பல துறைகளில் சாதிக்க வேண்டும் உங்கள் மகிழ்ச்சியை தொலைத்து விட்டு வாழ்க்கை வாழாதீர்கள் அனைத்தையும் சமாளிக்க கற்றுக் கொள்ளுங்கள் பெண்கள் வாழுகின்ற வாழ்க்கை சாதாரணமான வாழ்க்கை இல்லை அசாதாரணமான ஒரு சவாலான வாழ்க்கையை பெண்கள் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போதுபுதுச்சேரியில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் மற்றும் உறுதி செய்யப்பட்டவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

 

 

இதனை எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்தில் நிறுத்தி விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்இது மட்டும் இன்றி வாரம் வெள்ளிக்கிழமை அலுவலகத்திற்கு செல்லும் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இது பெண்களுக்கு ஊக்கத்தை அளிக்கும்பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு முறைகேடு நடப்பதாக காங்கிரஸ் கட்சியின் நாராயணசாமி தெரிவித்ததாக செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை அதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் இவர்கள் குறை கூறும் அளவிற்கு எதுவும் நடக்கவில்லை என்று பதில் அளித்தார்.

நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் அறங்காவலர்கள் முதல்வர் கல்வி இயக்குனர் பேராசிரியர்கள் முன்னாள் மாணவர் சங்கத்தினர் மாணவர் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS