குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்தி!

குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக ஜமாபந்தி நடைபெற்றது. குடியாத்தம் உதவி கலெக்டர் எம் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தியில் மேல் முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வி சிவக்குமார் உள்ளிட்ட கிராம மக்கள் உதவி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் மேல் முட்டுக்கூர் ஊராட்சி காக்கா தோப்பு கிராமத்தில் சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றனர் இங்கு பொது பணித்துறைக்கு சொந்தமான நீர் நிலையில் சுடுகாடு இருந்தது கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால் அங்கு உடல்களை புதைக்க இயலவில்லை. எனவே எங்கள் கிராமத்திற்கு நிரந்தரமாக சமத்துவ சுடுகாட்டிருக்கு இட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறிருந்தனர்.
CATEGORIES வேலூர்
TAGS குடியாத்தம் தாலுகா அலுவலகம்குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் ஜமாபந்திஜமாபந்தி கநிகழ்ச்சிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்