குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய நகர காவல் ஆய்வாளர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன இதன் இடையே கஞ்சா மற்றும் போதை பொருட்கள் குட்கா உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் விதமாக குடியாத்தம் புதிய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுநர்களிடம் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்பொழுது பேசிய அவர் ஆட்டோவில் சந்தேகத்திற்கு இடமாக போதை பொருட்கள் யாராவது கடத்துவதாக தெரிந்தால் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி கஞ்சா மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் குறித்த தகவலை தெரிவித்தால் அவர்களை மீட்டு அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து நல்வழிப்படுத்த முடியும் எனவும் மேலும் போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்தும் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் லட்சுமி எடுத்துரைத்தார்.
CATEGORIES வேலூர்
TAGS 100 கிலோ கஞ்சாகஞ்சா மற்றும் போதை பொருட்கள்குடியாத்தம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்போதை பொருட்கள்முக்கிய செய்திகள்வேலூர் மாவட்டம்