BREAKING NEWS

குடியாத்தம் போதை பொருட்களை கடத்தி வந்தவர் கைது.

குடியாத்தம் போதை பொருட்களை கடத்தி வந்தவர் கைது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் குட்கா விற்பனையை தடுக்க ஆந்திரா தமிழக எல்லை பகுதியான பத்தலபள்ளி பகுதியில் பேர்ணாம்பட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த அரசு பேருந்து சோதனை செய்த பொழுது அதில் தாறைக்காடு பகுதியைச் சேர்ந்த ஆதித் பாஷா என்பவர் ஆந்திராவில் இருந்து தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா பொட்டலங்களை விற்பனைக்காக எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து கார்த்திக் பாஷாவை கைது செய்த பேரணாம்பட் போலீசார் அவரிடம் இருந்து ஏராளமான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this…

CATEGORIES
TAGS