BREAKING NEWS

குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பெய்த ஆலங்கட்டி மழை- மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு.

குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் பெய்த ஆலங்கட்டி மழை- மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிப்பு.

வேலூர் மாவட்டத்தில் குறிப்பாக குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் நள்ளிரரவு குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

 

 

குடியாத்தம் நெல்லூர்பேட்டை, பாக்கம், ராமாலை, காந்திநகர், மேலாளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

 

 

இதனால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் மின் துறையினரும் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS