BREAKING NEWS

குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம்.

குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம்.

 

குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை குன்னூரைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டம்

 

 

 தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குன்னூர் கிராமத்தில் மழைக்காலங்களில் அதிகமாக மழை பொழிவு வரும் பொழுது அப்பகுதியில் உள்ள ஒரு சில இடங்களான சுந்தரலிங்க நகரம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து விடும் அவல நிலை ஏற்பட்டு வருவதாக கூறி,

 

 

அப்பகுதி பொதுமக்கள் சார்பாக பலமுறை ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகம் தேனி மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று மதியம் தேனியில் இரண்டு மணி நேரமாக கனமழை பெய்த காரணத்தால் குன்னூர் சுந்தரலிங்க நகர் பகுதி உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்கள் ஆத்திரம் அடைந்து சாலைக்கு வந்து தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கம்புகளை வைத்து சாலையை மறைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

 

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு பயனும் இல்லாத காரணத்தால் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் ராமலிங்கம் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் ஒத்து வராத காரணத்தால் ஆண்டிபட்டி தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தியதை எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆண்டிபட்டி தாசில்தார் கூறியதன் அடிப்படையில் கலைந்து சென்றனர்.

 

இதனால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை குன்னூர் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்க்கு மேலாக சாலையின் இருபுறமும் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )