BREAKING NEWS

குட்டி செந்தில் பாலாஜியாக யார் இருப்பார் என்று பார்த்தால் இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார் – அண்ணாமலை பேச்சு.

குட்டி செந்தில் பாலாஜியாக யார் இருப்பார் என்று பார்த்தால் இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார் – அண்ணாமலை பேச்சு.

அரியலூர் மாவட்டம்ஜெயங்கொண்டத்தில் மத்திய பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஒன்பதாம் ஆண்டு கால அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் ஐந்து கட்சி மாறிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு ஆறாவது கட்சிக்கும் போவதற்கான வாய்ப்பு உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு.

கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு செங்கோல் வீரவால் விநாயகர் சிலைகள் பரிசாக வழங்கப்பட்டது. 

பத்திரிகையாளர்கள் வீடியோ ஒளிப்பதிவு செய்யும்போது சில பார்வையாளர்களுக்கு மறைப்பதாக கூறி சில தொண்டர்கள் வாக்குவாத த்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் யாரும் வம்பு செய்யாதீர்கள் என்று வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.

 

1947 இல் இருந்து இந்தியாவில் தமிழகத்தில் நிறைய அரசியல் கட்சிகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

ஆனால் இதுவரை கண்டிராத அரசு தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்று வரும் அரசு. 

கடந்த 9 ஆண்டுகளில் சிறப்பாக நடைபெற்ற ஆட்சியின் காரணமாக உலக அரங்கில் இந்தியா பொருளாதார ரீதியாக பதினோராவது நிலையில் இருந்து ஐந்தாவது பெரிய நாடாக விளங்குகிறது.

நாடும் முழுவதும் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

 

220 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசால் தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு தொகுப்பை கூட சரியாக கொடுக்க முடியவில்லை. பருப்பு உற்பத்தியில் இந்தியா முதல் நாடாக மாறி இருக்கிறது.

மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. எல் இ டி பல்ப் இந்தியா முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து விஷயங்களையும் செல்போனில் கொண்டு வந்திருக்கிறோம். 12 ஆயிரத்தில் 735 கோடி முறை இந்தியா முழுவதும் இன்று வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.

9 ஆண்டுகளில் 100 மடங்கு பண பரிவர்த்தனை அதிகப்படுத்த பட்டுள்ளது. மக்களுக்கு இதில் என்ன லாபம் என்று கேட்கலாம்…

அரசின் அனைத்து நலத்திட்டங்களும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யப்படுவதற்கு முன்பாக மக்களுக்கு வந்து சேரவே இல்லை.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் பணப்பிரவர்த்தனைகள் ஒரே நேரத்தில் அனைத்து பயன் வழிகளுக்கும் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 26 பேருக்கு அரியலூர் மாவட்டத்தில் பிரதமர் வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்திற்கு வழங்கப்படக் கூடிய மானியம் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்பட்டுள்ளது .

முத்ரா கடன் 1512 கோடி ரூபாய் அரியலூர் மாவட்டத்தில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழக முழுவதும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் திமுக மத்திய அரசில் அங்கம் வகித்தது. டி ஆர் பாலு தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது இந்தியா முழுவதும் சாலைகள் போடப்பட்டன.

இதன் கத்தரி அமைச்சராக இருக்கும் பொழுது 47 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த ராஜாவை யாராலும் மறந்திருக்க முடியாது.

டி ஆர் பாலு அமைச்சராக இருந்தபோது மீண்டும் இரண்டாவது கேபினட் அமைக்கப்பட்டபோது மன்மோகன் செய்யும் டி ஆர் பாலுவை அமைச்சராக வேண்டாம் என்று திமுகவை கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியை உலகம் முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து தமிழ் மக்களுக்கும் பட்டி தொட்டி எல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிறார்.

பப்புவா நியூ கினியா நாட்டில் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு யாருக்கும் ராணுவ அணி வகுப்பு தர மாட்டார்கள்.

ஆனால் இந்திய பிரதமர் அங்கு சென்றபோது அவருக்கு ஆறு மணிக்கு மேல் அவருக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்தபோது அந்தந்த நாட்டில் தயாரான கொரோனா தடுப்பூசிகள் அந்தந்த நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. ஆனால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் உலகின் 120 நாடுகளுக்கு வழங்கப்பட்டன.

எங்கள் நாட்டிற்கும் அங்கிருந்து கிடைத்தது என்று கூறி அந்த நாட்டின் பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட வகையில் நன்றி தெரிவித்தார்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு கலாச்சாரம் உள்ளது.

ஆனால் புதிய பாராளுமன்ற வளாகத்தில் சோழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் சோழர்களின் செங்கோல் நிறுவப்பட்டது.

இது தமிழர்களுக்கு பிரதமர் வழங்கிய மரியாதை.

ஆனால் இதனை எதிர்த்துப் பேசுகிறார் இந்த தொகுதியின் எம்பி தலைவர் திருமாவளவன். இது சனாதன தர்மத்தின் அடையாளம். என்று கூறுகிறார். அவருக்கு ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். செங்கோல் என்கிற வார்த்தை முதல் முதலில் உச்சரிக்கப்பட்ட காலத்தில் மதங்கள் என்ற ஒன்று இந்த நாட்டில் இல்லை.

அரியலூர் மாவட்டத்தில் திராவிட ஆட்சியில் பின் தங்கிய l மாவட்டமாக தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக கடந்த 75 ஆண்டு காலமாக எந்த திராவிட அரசும் செயல்படவில்லை.

அரியலூர் மாவட்டத்தில் இல்லாத வளமே இல்லை. ஒவ்வொரு முறையும் திமுக அதிமுக அரசுகள் பொய் சொல்லி வாக்கு கேட்டு வெற்றி பெறுகின்றனர். 2024 ஆம் ஆண்டில் பாஜக 400 எம்பிக்களுடன் ஆட்சி அமைக்கும்.

அப்போது இந்த சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் வெற்றி வேட்பாளராக இருப்பார்.

நீட் என்கிற பரிச்சையை பெரிய பூதம் என்று பயமுறுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

அகில இந்திய அளவில் நம் தமிழகத்தைச் சேர்ந்த பிரபஞ்சன் முதல் ரேங்க் பெற்றுள்ளார்.

முதல் 10 இடங்களில் நான்கு இடங்களை தமிழக மாணவர்கள் பெற்றுள்ளார்கள்.

அனிதா சகோதரி அவர்கள் துரதிஷ்டவசமாக தனது உயிரை மாய்த்துக் கொண்ட சூழலை மறக்க முடியாது. தற்போது தமிழகத்தினுடைய நீர் வெற்றி அனிதாவின் ஆன்மாவிற்கு நிச்சயம் சாந்தி கிடைக்கும்.

கிராமப்புற மாணவர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்திலும் ஒரு அமைச்சர் இன்று அமலாக்கத் தொடங்கினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமித்ஷா ஜி கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்த போது மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அப்போ 2019 ஆம் ஆண்டு 2020 போக்குவரத்து துறை வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய குற்றத்திற்காக சார்ஜ் ஷீட் போடப்படுகிறது.

அது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி வழக்கு விசாரணை விரைவு படுத்தப்படுகிறது.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது மு க ஸ்டாலின் குளித்தலை பொதுக்கூட்டத்தில் செந்தில் பாலாஜியை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதே மு க ஸ்டாலின் செந்தில் பாலாஜியை மகாத்மா காந்தி என்று அழைக்கிறார்.

44 ஆயிரம் கோடி டாஸ்மாக் வருமானத்தை ஒவ்வொரு நாளும் தமிழக அரசு பார்த்து வருகிறது.

இன்று செந்தில் கணேஷ் கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரி இருக்கிறார்.

தமிழக முதல்வர் தலைமையில் 27 அமைச்சர்கள் காத்திருக்கின்றனர்.

அவர்கள் அனைவருமே ஊழல்வாதிகள் தான்.

இன்று செந்தில் பாலாஜியின் கைது திமுகவில் அனைவருக்குமே ஒரு நடுக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர்கள் அனைவரும் நள்ளிரவு இரண்டு மணிக்கு செந்தில் பாலாஜியை பார்த்ததற்கு காரணம் அவர்களை காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.

காலையில் செந்தில் பாலாஜி ஜாக்கிங் போய்க் கொண்டிருக்கிறார்.

இரவு ஹார்ட் அட்டாக் என்கிறார்.

இந்த நாடகங்களை தமிழ்நாடு இன்னும் எத்தனை காலத்துக்கு பார்க்க போகிறது.

ஐந்து கட்சி மாறிய செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு ஆறாவது கட்சிக்கும் போவதற்கான வாய்ப்பு உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

CATEGORIES
TAGS