குத்தாலம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது குத்தாலம் அரசினர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 0-18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கொண்ட குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமினை குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன்.குத்தாலம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜ்.குத்தாலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மொழி.குத்தாலம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுகன்யா சுரேஷ்.ஆகியோர் முகாமினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இந்த முகாமில் புதிய தேசிய அடையாள அட்டை.தனித்துவம் வாய்ந்த தேசிய திறன் அடையாள அட்டை.இலவச ரயில் மற்றும் பேருந்து பயண சலுகை.உதவி உபகரணங்களுக்கான பதிவு.உதவித்தொகைக்கான பதிவு.மறு மதிப்பீடு.மாத பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.
மேலும் இம்முகாமில் கண் மருத்துவர்.குழந்தைகள் நல மருத்துவர்.மனநல மருத்துவர்.எலும்பு மூட்டு மருத்துவர்.காது மூக்கு தொண்டை மருத்துவர்.ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளை பரிசோதனை செய்து அடையாள அட்டை வழங்கினர்.
தொடர்ந்து இம்முகாமில் குத்தாலம் லயன்ஸ் சங்கம் சார்பாக லயன்ஸ் சங்கத் தலைவர் மகாலிங்கம்.முன்னாள் மண்டல தலைவர் ராஜ்குமார்.செயலாளர் பார்த்திபன்.பொருளாளர் கருப்புசாமி. ஆகியோர் வந்திருந்த மருத்துவப் பயனாளிகளுக்கு மதிய உணவு வழங்கினர்.
தொடர்ந்து மாவட்டம் மாற்றுத்திறனாளிகளின் நல அலுவலர் சீனிவாசன்.உடல் இயக்க வல்லுனர் ரூபன் சுமித்.வட்டார வளமைய மேற்பார்வையாளர் குலசேகரதாசன், வட்டார கல்வி அலுவலர்கள் புஷ்பலதா, பாபுராஜ், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஞானசேகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அறிவரசு வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் குமார் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள், சிறப்பாசிரிய பயிற்றுநர்கள் இயல் முறை மருத்துவர் என அனைவரும் இம்முகாமில் கலந்து கொண்டனர்.