BREAKING NEWS

குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொழிகள் ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொழிகள் ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான மாணவர்கள் கையாளும் மொழி ஆய்வகங்களை நிறுவி வருகிறது. அதன்படி 2023 – 24 ஆம் ஆண்டுக்கான ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கில மொழியை கையாளும் திறனை மேம்படுத்துவதில் இந்த திட்டம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

 

இதனிடையே இந்த மொழிகள் ஆய்வக திட்டம் தமிழ்நாட்டில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து மாணவர்களுடன் ஆய்வகத்தில் கணினியை இயக்கி பார்த்து சிறிது நேரம் கலந்துரையாடினார்.

 

 

தொடர்ந்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எந்த இடத்தில் நீ நிராகரிக்கப்படுகிறாயோ அந்த இடத்தில் நீ நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளங்குவதாக கூறினார்.

 

பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கிறதோ அனைத்தும் ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் இந்த திட்டம் என கூறினார்.

 

காலை உணவு திட்டத்தின் மூலம் 40% வரை மாணவர்கள் வருகை அதிகரித்துள்ளதாகவும், விரைவில் தமிழக முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

 

 

2020 ல் விடியலை நோக்கி பயணத்தின்போது என்னை இதே பகுதியில் காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அதே காவல்துறையினர் தமக்கு இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

 

மாணவர்களிடம் அழிக்க முடியாத செல்வம் கல்வி செல்வம் தான் என்றும் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

 

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன்,மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார்,நிவேதா.எம்.முருகன், பன்னீர்செல்வம்,ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி பங்கேற்றனர் .

 

CATEGORIES
TAGS