குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் திங்கள் கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.மகேந்திரன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வி.கஜேந்திரன், சுமதி, ஒன்றியக் குழு துணை த்தலைவர் இரா.முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் 53 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன்,எஸ்.ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் வருமாறு:
சிவகாமசுந்தரி(திமுக): நக்கம்பாடி மயானசாலை,நாகம் பாடி தார்ச்சாலை ஆகியவற்றை சீரமைக்க வேண்டும்.
சிவகுமார் (பாமக): கோனேரிராஜபுரம் பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களை கழிப்பறை வசதியுடன் கட்ட வேண்டும்.
கோனேரிராஜபுரம் கோயிலைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
வினோத்(பாஜக): கோமல் சித்தாம்பூர் மாரியம்மன் கோவில் தெரு, ஆட்டூர் எழுமகளூர் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
செழியன்(அதிமுக): பாலையூர் வடக்குத் தெருவில் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. அங்கு குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.
பாஸ்கரன்(அதிமுக): கீழ பெரம்பூரில் காருகுடி வாய்க்கால் ஆக்கிரமித்து மூடப்பட்டுள்ளது.
விவசாய பாசன வசதிக்காக அதை வெட்டி சரி செய்ய வேண்டும்.எடக்குடி, சேத்தூரில் பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.
சத்யா(அதிமுக): மங்கநல்லூர் பாய்க்கார தெரு,கந்தமங்கலம் ஆதிதிராவிடர் தெருகளில் தார் சாலை அமைக்க வேண்டும்.
திவ்யா(திமுக): கோமல்-கொழையூர் பாலத்தை சரிசெய்ய வேண்டும். கொழையூர் ஊராட்சி செயலர் பணியில் இருப்பது இல்லை.
கோமல் கடைவீதியில் கழிப்பறை கட்ட வேண்டும். ராஜேஸ்வரி(திமுக): கடலங்குடியில் தெரு பெயர் பலகைகள் அமைக்க வேண்டும். விபத்துகளை தவிர்க்க போதிய வேகதடை அமைக்க வேண்டும்.
ராஜா (திமுக):அரையபுரம், தொழுதாலங்குடி கிராமங்களில் பழுதடைந்த குடிநீர் தொட்டிகளை சரிசெய்ய வேண்டும் கோரிக்கை விடுத்தார் கூட்டத்தின் இறுதியில் தலைவர் அனைத்து உறுப்பினர்களின் கோரிக்கைகள் பாரபட்சமின்றி ஏற்கப்பட்டு நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
இக்கூட்டத்தில், மேலாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.