BREAKING NEWS

குத்துக்கல்வலசையில் இராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா

குத்துக்கல்வலசையில் இராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் மாலை முரசு அதிபரும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனருமான பா. இராமச்சந்திர ஆதித்தனார் 91வது பிறந்தநாள் விழா இந்து நாடார் வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் சத்திய சேகர், துணைத்தலைவர் ராம்குமார், செயலாளர் முருகேசன், துணை செயலாளர் சீதாபதி, பொருளாளர் அருணாசலம் செயற்குழு உறுப்பினர் மாரி செல்வராஜ், மற்றும் நிர்வாகிகள் தவசிமுத்து, குருசாமி, சங்கர்கணி தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார், பொருளாளர் சுப்பிரமணியன், மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நாடார், தென்காசி மாவட்ட கல்வி குழு செயலாளர் முப்புடாதி, மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது தென்காசி மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் உடைய மூன்று சிலைகளை திறந்து வைத்த பெருமைக்குரியவர்.

தென் மாவட்ட பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர். பட்டதாரிகளுக்கு மட்டுமில்லாமல் பட்டதாரி இல்லாதவர்களுக்கும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை வாய்ப்பு உருவாக்க திட்டம் வகுத்து கொடுத்தவர் எஸ்.ஆர். நிறுவனத்திடம் இருந்தது 67% பங்குகளை நாடார் சமுதாயத்திற்க்கு மீட்டுகொடுத்தவர் பா இராமச்சந்திர ஆதித்தனார் . சுயமரியாதை கொள்கை கொண்டவர்.

தந்தையைபோல தமிழ் வளர்த்தவர். அவரோடு பயணித்த நாட்கள் மறக்கமுடியாதவை என்று புகழாரம் சூட்டினார் இராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாளில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பெருமை கொள்கிறது என்றார்.

CATEGORIES
TAGS