BREAKING NEWS

குப்பையில் இருந்து நெகிழிகளை அகற்றும் தொழில்நுட்பத்தை சிவகாசியைச் சேர்ந்த மாணவிகள் கண்டறிந்துள்ளனர்.

குப்பையில் இருந்து நெகிழிகளை அகற்றும் தொழில்நுட்பத்தை சிவகாசியைச் சேர்ந்த மாணவிகள் கண்டறிந்துள்ளனர்.

சாதனை மாணவிகள்!

 

குப்பையில் இருந்து நெகிழிகளை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது. இதற்கு புதிய தொழில்நுட்பத்தை சிவகாசியைச் சேர்ந்த மாணவிகள் 4 பேர் கண்டறிந்துள்ளனர்.

 

விருதுநகர் மாவட்டத்துக்கு உள்பட்ட சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரி மின்னியல்,  தொலை தொடர்பியல் துறை மாணவிகள் ஏ.நித்யாஸ்ரீ,  ஐ.மெர்லின் எஸ்தர், பி.சந்தியா, ஜெ.பவித்ரா  ஆகிய 4 மாணவிகள் குப்பையிலிருந்து நெகிழி கழிவுகளை தனியே பிரித்து எடுக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.

 

 இதற்கு வழிகாட்டியாக உதவிப் பேராசிரியர் கருப்பசாமி செயல்பட்டார்.

 

குப்பைகளில், கண்ணாடி கழிவுகள், மரக்கழிவுகள், உணவுக் கழிவுகள், நெகிழி கழிவுகள் உள்பட பல கழிவுகள் உள்ளன.

 

இதிலிருந்து நெகிழி கழிவுகளை இமேஜ் தொழில்நுட்பத்தைப் பயன்

படுத்தி, விடியோ காமிரா மூலம் பதிவு செய்யப்பட்டு, பின்பு அந்தப் பதிவானது செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலமாக நெகிழி கழிவுகளை எளிதில் கண்டறிந்து , அவற்றை பிரித்து எடுக்க வழிவகை செய்கிறது. 

 

இந்தச் செயல்திட்டம் குப்பைகளைப் பிரித்து எடுக்கும் இடங்கள், தொழிற்சாலைகள்,  மருத்துவக் கழிவுகளை பிரித்து எடுக்கும் இடங்களில் பயன்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS