குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது

குமரி மாவட்டத்தில் பெண்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது குமரி மாவட்டத்தில் நுழைவு வரி என்ற பெயரில் அடாவடித்தனம், அராஜகம்.மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
திற்பரப்பு பகுதியில் நுழைவு வரி என்ற பெயரில் கார் பார்க்கிங் வசூல் செய்வதோடு பேரூராட்சிக்கு சொந்தமான மக்கள் பயன்பாட்டுக்கு உள்ள தெருக்களில் கார்களை பார்க்கிங் செய்கிறார்கள்.
எவ் வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் நுழைவு வரி என்று சீட்டைக் கொடுத்து 50 ரூபாய் ஜிஎஸ்டி இல்லாமல் வசூல் செய்கிறார்கள்.
இந்த நுழைவு வரி எதற்கு பயன்படுகிறது, எங்கு பார்த்தாலும் குப்பைகளும், சரி இல்லாத சாலைகளும்,சுற்றுலா பயணிகளை முகம் சுளிக்க வைக்கிறது.
இவர்கள் வரி வசூல் செய்வது,வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வருவது போல் எதற்காக இந்த வரி, ஏன் இந்த வரி,என்று கேட்க சொல்கிறது.
மேலும் தக்கலை பகுதியில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை அருகில் நுழைவு வரி என்று பெயரில் அடாவடி மற்றும் ரவுடித்தனமான ஆட்களை கொண்டு மிரட்டுவது,
காரிலிருந்து சாவி எடுத்துக் கொள்வது, போட்டோ எடுப்பது, போன்ற நிகழ்வுகள் முகம் சுளிக்க வைப்பதுடன் ஒரு வித அச்சத்தை உண்டு பண்ணுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு இப்பகுதிகளில் எவ்வித பாதுகாப்பும் இல்லை.ஒரு விதஅச்சத்தோடு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மன அமைதிக்காக வந்து மன நிம்மதியை இழந்து செல்கிறார்கள். உரியவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமா?
எங்கு பார்த்தாலும் சுகாதார சீர்கேடுகள், ஆக்கிரமிப்புகள், கலப்பட உணவுகள், நிறைந்து காணப்படுகிறது களத்தில் அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் உணவு பாதுகாப்புத்துறை,
போக்குவரத்து காவல்துறை, பொதுப்பணித்துறை,இவைகள் எல்லாம் செயல்படாமல் கோமா நிலையில் உள்ளது உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை