கும்பகோணத்தில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையின் போது 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..

மேலக்காவேரியை சேர்ந்த ராஜ் முகம்மது என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை ..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தாராசுரம் சுங்காகேட் அருகில் காரில் குட்கா பொருட்களை ராஜ் முகம்மது என்பவர் விற்பனை செய்வதாக தெரிகிறது.
இந்நிலையில் கும்பகோணம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகேஷ் உத்தரவின் பேரில் கிழக்கு காவல் நிலையஆய்வாளர் அழகேசன் தலைமையில் உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீசார் காமராஜ், பிரகாஷ், செம்புலிங்கம், ஆகியோர் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தகவலின் பெயரில் தாராசுரம் காய்கறி மார்க்கெட் அருகில் குட்கா பொருட்களை செய்து கொண்டிருந்த மேலக்காவேரி பகுதியைச் ராஜ் முகமது என்பவரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 10 கிலோ குஸ்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS 10 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்குட்காகும்பகோணம்குற்றம்சுங்காகேட்தஞ்சாவூர்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்