கும்பகோணத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா

கும்பகோணத்தில் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நாட்டியாஞ்சலி விழா
இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்து
400 க்கு மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்பு.
சிதம்பரத்தில் வருடம் தோறும் ஆடல் வல்லானுக்கு காணிக்கையாக நாட்டியாஞ்சலி விழா கொண்டாப்படுகிறது அதை மனதில் வைத்து நாட்டிய மாமணிகள் பலரையும் பிரசித்தி பெற்ற நட்டுவாங்க ஆசிரியர்களையும், வளர்ந்து வரும் நடன கலைஞர்களையும் கும்பகோணம் மாநகருக்கு வரவழைத்து நாட்டியாஞ்சலி விழாவை கடந்த 19 ஆண்டுகளாக அருள்மிகு ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் சிறப்புடன் நடத்தி வருகிறோம்.
வருகிற பிப்ரவரி மாதம் 18 ம் தேதி சனிக்கிழமை துவக்கவிழா
ஆரம்பித்து 3 நாட்கள் நடைபெற உள்ளது.
நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் செந்திரசேகர முப்பனார்
தலைமை தாங்குகிறார்கள்.

மாண்புமிகு நீதியரசர் பாஸ்கரன், மற்றும் சினிமா புகழ் ஸிந்து ஷியாம் குத்து
விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைக்கிறார்.
சிட்டி யூனியன் வங்கி முன்னாள் தலைவர் பாலசுப்ரமணியன்
தொழிலதியர் ராயா கோவிந்தராஜன் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
இந்தியாவில் பல பாகங்களிலிருந்து 400 க்கு மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்கிறார்கள் பரதம், குச்சுபுடி, மோகினியாட்டம் ஓடிஸி கதக் போன்ற நிகழ்ச்சிகள் பிப்ரவரி 18 முதல் 20 தேதி வரை மாலை 6.30-க்கு தொடங்கி இரவு 12 மணி வரை நடைபெறும்
இந்த ஆண்டு ரஷ்யாவிலிருந்து குச்சுபுடி நடன கலைஞர்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து,துபாய், வியாட்நாம் கலைஞர்கள் கலந்துகொள்கிறார்கள்.
இந்த ஆண்டு சினிமா புகழ் ஸிந்து ஷியாம் வெளிநாட்டில் வாழும் இந்திய கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள்
இத்தகவலை நாட்டியாஞ்சலி விழாக்குழுத்தலைவர் சந்திரசேகர மூப்பனார் ,செயலாளர் ராஜகோபாலன்
இணை செயலாளர்
சுரேஷ் தெரிவித்தனர்.
நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடக்க சங்கீத நாடக அகடமி புதுடெல்லி தென்னக பண்பாட்டு மையம் தஞ்சை சிட்டி யூனியன் வங்கி கும்பகோணம் மற்றும் முன்னணி வங்கிகள் வியாபார நிறுவனங்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர்.
