கும்பகோணத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நிரந்தரமான வீடு வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் வாடகை வீட்டில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நிரந்தரமான வீடு வழங்கக்கோரி கொரானாவினால் வாழ்வாதரங்களை இழந்து மக்கள் பெரிதும் துன்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் வாடகை வீட்டில் வசிப்போர்கள் வாடகை கொடுக்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படியும் வாடகை பணம் செலுத்தினால் அவர்களுக்கு உணவு சாப்பிட கூட வழியில்லை ஆகவே தமிழக அரசு உடனடியாக வாடகை வீட்டில் வசிப்போருக்கு நிரந்தரமான வீடு வழங்கக் கோரியும் சேஷம்பாடி திருக்குறள் நகரில் ஏற்கனவே கட்டப்பட்ட ஆண்டு கணக்கில் காலியாக உள்ள வீடுகளை மக்களுக்கு ஒதுக்கீடு செய்து தரக்கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இளைஞர் அரண் பொறுப்பாளர் சைமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் மற்றும் காத்திருப்பு போராட்டம் ஈடுபட்டனர். இதில் வாடகை வீட்டில் குடியிருப்போர் ஏராளமான கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
