கும்பகோணம் அருகே கபிஸ்தலத்தில் பல ஆண்டுகளாக சாதி சான்று கிடைக்காததால் அவதிப்படும் இருளர் இன மக்கள்….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கபிஸ்தலம் அரசலாற்றுப்படுகை கிராமத்தில் 30 மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இவர்களுக்கு சாதி சான்று இல்லாத காரணத்தால் இப்பகுதி மக்களின் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ந்து முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது ஜாதி சான்று வீட்டுமனை பட்டா என அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என வேதனையுடன்
அவர்கள் தெரிவித்து வருகின்றார்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஜாதி சான்று வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
அறம் செய்திகளுக்காக கும்பகோணம் செய்தியாளர் தீனதயாளன்.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசலாற்றுப்படுகை கிராமம்எந்தவித அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வரும் இருளர் இன மக்கள்கபிஸ்தலம்கும்பகோணம்தஞ்சாவூர் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 30 குடும்பத்தினருக்கு சாதி சான்றிதழ்கள்தஞ்சாவூர் மாவட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்முக்கிய செய்திகள்