BREAKING NEWS

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பிரசித்தப்பெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா .. திரளான பக்கதர்கள் பங்கேற்பு ..

கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் பிரசித்தப்பெற்ற திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா .. திரளான பக்கதர்கள் பங்கேற்பு ..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தர பெருமாள் கோவில் லேபர் ஆபிஸ் தெருவில் எழுந்தருளிருக்கும் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவிழா சென்ற மாதம் 22ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி தினமும் மகாபாரத கதை சொற்பொழிவு நடைபெற்றுது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று கூந்தல் முடி நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து பக்தர்கள் அரசலாற்றில் இருந்து சுவாமி புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தீக்குளி வந்தடைந்தது.

அங்கு பக்தர்கள் மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள் அதனை தொடர்ந்து வான வேடிக்கையும், சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவையாறு தியாக பிர்மமஹோத்வை சபா அறங்காவலர் ஜி சந்திரசேகர் மூப்பனார் தலைமையில், கிராமவாசிகள் நாட்டாமைகள் விழா குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கும்பகோணம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்.

Share this…

CATEGORIES
TAGS